குன்னூரில் அ.இ.அ.தி.மு.கவினர் கொண்டாட்டம் 


எதிா்வரும் தமிழக சட்டமன்ற தோ்தலில் முதலமைச்சா் வேட்பாளராக அ.தி.மு.க வின் சாா்பாக  இன்றைய முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செய்ததை மாநிலம் முழுவதும் அ.தி.மு.க வினா் கொண்டாடி வருகின்றனா். அதையொட்டி குன்னூாில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் அ.இ.அ.தி.மு.க நகரச் செயலாளா் D. சரவணக்குமாா் தலைமையில் கழகத்தினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.