வனத்துறையினரின் ஒப்புதலோடு கேரளாவிற்கு கடத்தப்படும் அரியவகை புளியமரங்கள்

உரிய அனுமதி இல்லாமலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் ஒப்புதல் இல்லாமலும் போடிமெட்டு மலைச்சாலை வழியாக வனத்துறையினரின் ஒப்புதலோடு  கேரளாவிற்கு கடத்தப்படும் தேனி மாவட்டத்தில்  சாலையோரங்களில் காணப்படும் அரியவகை புளியமரங்கள்.

 


 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் அனுமதி இல்லாமலும் போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போடி மெட்டு வழியாக கேரளாவிற்கு  வனத்துறையினரின் ஒப்புதலோடு  14 டன் எடை கொண்ட புளிய மரங்களை ஏற்றிக்கொண்டு முந்தல் செக் போஸ்டை கடக்க முயன்ற 2 லாரிகளை போடி வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் மரங்கள் ஏற்றிச் செல்வதற்கு தடை உள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக போடி மெட்டு வழியாக வனத்துறையின் ஒப்புதலோடு தமிழகத்தில் அழிந்து வரும்  தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் காணப்படும் அரிய வகை  புளிய மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டப்பட்டு 

 


 

போடி மெட்டு வழியாக இரவு நேரங்களில் கடத்தப்படுவது தொடர்கதையான நிலையில் தற்போது வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்து. இதனைத்தொடர்ந்து போடி வருவாய்த்துறையினர் நேற்றிரவு முந்தல் மதுவிலக்கு செக் போஸ்டை கடக்க முயன்ற இரண்டு லாரிகளை பிடித்த திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில்  இருபுறமும் அதிகளவில் புளியமரங்கள் காணப்படுகிறது கடந்த சில வருடங்களாக இந்த சாலையோரங்களில் உள்ள புளிய மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது மேலும் இந்த வகை மரங்களை வெட்டுவதற்கு வருவாய்த் துறையின் அனுமதி பெற்ற பின்னரே மரங்களை வெட்ட வேண்டும் மேலும் சொந்த இடங்களில் மரங்கள் இருந்தாலும் அதற்கும் அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்டவேண்டும் அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இந்த வகையான மரங்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை உள்ளது இந்த சட்டதிட்டங்களை மீறி தற்போது போடி மெட்டு வழியாக கேரளாவிற்கு போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு  புளிய மரங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதற்கு உடந்தையாக வனத்துறையினர் செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் இயற்கையின் மாசு பாடுகளை தடுக்கப் பெரிதும் உதவும் இந்த அரியவகை புளிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.