தமிழகம் முழுவதும் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,499 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி அருகே சமூக நலத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மைய  சுமார் 48 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார் மேலும் புதிதாக பதிவு செய்த திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.


தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் "குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு இந்த ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட உள்ளது எனவும் இதன்மூலம் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் இந்த மையங்களில் தங்கியிருந்து தங்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் 


மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த 93 குழந்தைகள் மேலும் ஒரு பெற்றோரை இழந்த 3499 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளது 

இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் அதற்கான உதவியும் செய்யப்பட்டு வருகிறது

இந்தத் திட்டம் வேகமாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார் 

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்லூரி வரை இலவச படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சட்டத்துக்கு உட்பட்டு 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது 

அதிலும்  கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோரை இழந்ததால் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார் 

தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள நிகிலேஷன் நகர் பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்தப் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இதைத் தொடர்ந்து காவல் துறை சார்பில் நிகிலேஷன் நகர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது இந்த புறக் காவல் நிலையத்தையும் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார் தொடர்ந்து இந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டினார் 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு ,சமூகநலத்துறை அலுவலர் தனலட்சுமி திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.