தூத்துக்குடி திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரூ.4000/-, 15 வகையான மளிகைப் பொருட்கள்- அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.


தூத்துக்குடி அருள்மிகு சங்கரராமேஸவரர் திருக்கோயில் கலையரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் 

திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு மாத  திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் (பொ) செல்வவிநாயகம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் (பொ) அன்புமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.