80 ஆக்சிஜன் படுக்கைகளுடன் ஏ.கே.வி.என் சாரிட்டி மருத்துவமனையின் கோவிட் கேர் சென்டர்: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் சார்பு நிறுவனமான,  ஏ.கே.வி.என் சாரிட்டி மருத்துவமனையின் கோவிட் கேர் சென்டர் அவிநாசியை அடுத்த தெக்கலூர், எஸ்.சி.எம். மில் வளாகத்தில் துவங்கப்பட்டது. இதை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். 

 


  திருப்பூர் மாவட்டம் அவினாசி தெக்கலூரில் அமைந்துள்ள தி.சென்னை சில்க்ஸ், எஸ்.சி.எம்.  குழுமத்தின் ஏ.கே.வி.என் சேரிட் ஹாஸ்பிட்டலும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் , ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் 80 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சை மையத்தினை  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஜயகார்த்திகேயன்  தலைமையில்   தமிழக் செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் அவர்கள் திறந்து வைத்தார். 

திருப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ்  ஆகியோர் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டனர். மருத்துமனை நிர்வாக இயக்குனர் .டி.கே.சந்திரன் - பிரதர்ஸ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  பேசுகையில்,
 திருப்பூர் மாவட்டம் அவினாசி தெக்கலூரில் அமைந்துள்ள தி.சென்னை சில்க்ஸ், எஸ்.சி.எம்.  குழுமத்தின் ஏ.கே.வி.என் சேரிட் ஹாஸ்பிட்டலும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் , ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் 80 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கோவிட் கேர் சென்டர் துவங்கியுள்ளது.
கொரோனாவில் இருந்து மக்களை காக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலமாக தமிழக அரசு சிறப்பாக தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. மக்களுக்கான தடுப்பூசியை  மத்திய அரசு மூலம் பெற்று மக்களுக்கு வழங்கி வருக்கிறோம். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி  தயாரிக்கும் ஆலையில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அங்கிருந்தும் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். மேலும் உலகவிய தடுப்பூசி கிடைக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களை பொறுத்தவரை அனைத்து கட்சி ஆலோசனை கேட்டு தான் நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டு வருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனை தடுக்க தீவிர  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  
திருப்பு மாவட்டத்தில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு  வருகிறது. தமிழகத்திற்கு  2வது கட்டமாக 4.20லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது பிரித்து கொடுத்துள்ளோம். முன்பதிவு செய்து மக்கள் தடுப்பூசி போட வேண்டும். மக்கள் அலை கழிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Previous Post Next Post