திருப்பூர் மாநகர முதல் பெண் போலீஸ் கமிஷனராக வி.வனிதா ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு

  திருப்பூர் மாநகர முதல் பெண் போலீஸ் கமிஷனராக வனிதா ஐபிஎஸ் பொறுப்பேற்றார்.திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக இருந்த கார்த்திகேயன், திருப்பூரில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு,  சீருடை பணியாளர் தேர்வாணைய  ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக சென்னை ரயில்வே ஐஜி ஆக இருந்த  வி.வனிதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

 இதனையடுத்து இன்று திருப்பூர் வந்த வி.வனிதா மாநகரபோலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். 

அவருக்கு மாநகர போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். திருப்பூர் மாநகர காவல் உருவாக்கப்பட்டதன் பின்னர்  தற்போது தான் முதல் முறையாக திருப்பூர் மாநகருக்கு பெண்போலீஸ் கமிஷனராக வி.வனிதா ஐ.பி.எஸ்.,  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னதாக ஆணகளே திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்துள்ளனர். திருப்பூரின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள வி.வனிதா, ஏற்கனவே தமிழ்நாட்டின் முதல் பெண் டி.எஸ்.பி.,யாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.