மாப்பிள்ளையூரணியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்.பி ஆய்வு.!

 


தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள ராம்தாஸ் நகர்,சிலோன்காலனி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அகதிகள் முகாமில் உள்ள இளைஞர்கள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் அவர்கள் இருக்கும் குடியிருப்புகளை கனிமொழி எம்.பி., பார்வையிட்டார்.


திமுக அரசு, அகதிகள் முகாமிற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மக்களிடம் உறுதி அளித்தார்.

தொடர்ந்து அங்கு உள்ள 75 குடும்பங்களுக்கு எம்.பி நிதியில் இருந்து 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜஸ்டின்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், வசந்தா மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.