கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் சீரமைப்பு பணி - ஆட்சியர் செந்தில் ராஜ், ஆய்வு


தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் நிரந்தர சரீ மைப்பு பணிகள் மதிப்பீடு தயாரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

கோரம்பள்ளம் குளம் பொட்டல்காடு மதகு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு மதகு பகுதியில் உள்ள பழுதுகளை நீக்கி சீரமைப்பு செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்து கோரம்பள்ளம் குளம் இரட்டை மதகு பகுதியில் பாசனத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள மதகுகளை நேரில் பார்வையிட்டு பழுதுகளை நீக்கம் செய்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

அதனைத்தொடர்ந்து கோரம்பள்ளம் அத்திமரப்பட்டி உப்பாத்து ஓடை 24 கண் மதகு பகுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்செந்தில் ராஜ்,நேரில் சென்று பார்வையிட்டார். 

மேலும் உப்பாத்து ஓடை நிரந்தர சீரமைப்பு பணிகள் ரூ.59.50 கோடி மதிப்பீட்டில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள பணி விபரங்களை நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருத்தத்ஜெய் நாராயணன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர்கள் அண்ணாத்துரை (தாமிரபரணி), சரவணக்குமார் (கோரம்பள்ளம்), உதவி செயற்பொறியாளர் செல்வராஜன், உதவி பொறியாளர் பத்மநாபன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Previous Post Next Post