கோவில்பட்டியில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பால்பண்ணை - ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சந்தீப் நகரில் திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பால்பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பால்பண்ணையினை ஆய்வு செய்து அந்த பகுதியில் வசிக்கும் 30 குடும்பத்தினருக்கு தேவையான குடிநீர், மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மேலும் கோவில்பட்டி திலகரத்னா தீப்பெட்டி தொழிற்சாலை, 

கோவில்பட்டி ஸ்ரீபாலாஜி உட் அண்டு ஸ்கினிங் வால்ஸ் தீப்பெட்டிக்கு பயன்படுத்தப்படும் தீக்குச்சி தொழிற்சாலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து தொழிலாளாகள் பணிபுரிகிறார்களா என நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

எட்டயபுரம் வட்டம் குளத்துவாய்பட்டி இலங்கை அகதிகள் முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் 31 குடும்பத்தினருக்கு தேவையான குளியல் அறை, கழிப்பிடம், தண்ணீர், கழிப்பிடம், தார் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிட உரிய அலுவலர்களுககு; உத்தரவிட்டார்.

ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர்கள் அமுதா (கோவில்பட்டி), ஐயப்பன் (எட்டயபுரம்), திலகரத்னா தீப்பெட்டி தொழிற்சாலையின் உரிமையாளர் திலகரத்னம், குளத்துவாய்பட்டி இலங்கை அகதிகள் தலைவர் சுதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர். 


Previous Post Next Post