விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு கூடம் - கனிமொழி கருணாநிதி எம்.பி திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஏகம் பவுண்டேஷன் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 40 லட்சம் மதிப்பிலான 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு 

ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறைகளை திறந்து வைத்து பார்வையிட்டார் மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன்,இணை இயக்குநர் நலப்பணிகள் மருத்துவர் முருகவேல்,வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, சித்த மருத்துவர் தமிழ்அமுதன், 

குழந்தைகள் நல மருத்துவர் திவ்யா, பல் மருத்துவர் முத்துவள்ளி,செவிலியர் கண்காணிப்பாளர் வேலம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் செவிலியர்கள் அனைத்து பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.