பாலியல் வீடியோ விவகாரம் -தமிழக பா.ஜ., பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் விலகல்.!

தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ., பொதுச் செயலாளர் பதவியில்


இருந்து ராஜினாமா செய்வதாக கே.டி ராகவன் அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கே.டி.ராகவன் பெண் ஒருவருடன் தனது வீட்டு பூஜை அறையில் பாலியல் சாட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.