திரிபுரா மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் - நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள், பத்திரிக்கை அலுவலகம், மற்றும் கட்சி தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி.ஆறுமுகம், ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், காஸ்ட்ரோ, முத்து கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் இசக்கி முத்து வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, மாணவர் சங்க மாவட்ட தலைவர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்