வங்கக் கடலில் புதிய புயல்: வானிலை மையம் தகவல்



தெற்கு அந்தமானில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமானில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post