தூத்துக்குடியில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி - சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆய்வு.!


தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்கள். அருகில், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ,   தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

பின்னர்  மாநகரின் தாழ்வான பகுதிகளான தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்திநகர், கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர் மற்றும் ஐயாவிளை பகுதிகளில் 5 முதல் 30 வரையிலான பல்வேறு நிலையிலான திறன் கொண்ட குதிரை சக்தி டீசல் மற்றும் மின் மோட்டார்களின் இயக்கநிலையினை ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றுவதற்கு கூடுதலாக மின் மற்றும் டீசல் மோட்டார்களை பயன்படுத்த வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

Previous Post Next Post