ஏமன் அகதிகள் முகாம் மீது சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் - 3 குழந்தைகள் உட்பட 70 பேர் பலி.! - ஐநா கண்டனம்.!


ஏமனின் சனா நகரில் அகதிகள் முகாமாக செல்படும் சிறைச்சாலை மீது சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


ஏமனின் சனா என்ற நகரில் உள்ள ஒரு சிறைச்சாலை அகதிகள் முகாமாக செயல்பட்டு வருகிறது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறைச்சாலையை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.


இந்த தாக்குதலில் அகதிகள் உள்பட 70 பேர் உயிரிழந்தனர். மேலும், 138 பேர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், அந்நாட்டின் ஹொடிடா என்ற நகரில் உள்ள தொலைதொடர்பு மையத்தை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொலைதொடர்பு மையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் இணையதள சேவைகளும் (internet service) பாதிக்கப்பட்டுள்ளன. அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்தபோதும், "தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்று குடெரெஸ் கூறினார்.

சேதமடைந்த தடுப்பு மையத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள சிறை பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் உட்பட சவூதி நகரங்கள் (Attatck on Saudi Arabia)மீது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடைபெற்றன. இதனை அடுத்து ஹவுதி ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களை சவுதி தலைமையிலான கூட்டணி தீவிரப்படுத்தியுள்ளது.

Previous Post Next Post