பெண்களுடன் ஜாலியாக ஊர் சுற்றியே மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் அதிர்ஷ்டகார இளைஞர்...!! - ஹ்ம்..நமக்கு அந்த கொடுப்பினை இல்லையே...!!

அமெரிக்காவில் 20 வயது இளைஞர் ஒருவர் பெண்களுடன் ஜாலியாக ஊர் சுற்றியே மாதம் ரூ.6  லட்சம் சம்பாதிக்கிறார்.. இந்த தகவலை அவரே டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணம், யார்க்உட் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் லாக், 20 வயது இளைஞரான இவருடைய இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களில் ஒருவர் அவரது காதலியின் விசுவாசத்தை சோதிக்க தனக்கு உதவுமாறு அவரிடம் கேட்டபோது இது முதலில் தொடங்கியது.

அவர் அதைப் பற்றி டிக்டோக்கில் பதிவிட்டார், அது விரைவில் வைரலானது, சில நாட்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது. பின்னர் அவர் மேலும் மேலும் கோரிக்கைகளைப் பெறத் தொடங்கினார், இறுதியில் அவர் தனது சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கினார். இப்போது, ​​ அதுவே அவருக்கு முழுநேர தொழிலாகி விட்டது. 

இப்போது இவர் செய்யும் டிடெக்டவ் பணி என்னவென்றால் ஒருவரின் காதலி அவருக்கு உண்மையாக இருக்கிறாரா அல்லது வேறு காரணங்களுக்காக அவரை காதலிக்கிறாரா என்று கண்காணிப்பு செய்கிறார்.

அவரிடம் வரும் காதலர்கள், காதலி குறித்த தகவல்களை கொடுத்து அவரிடம் தன் காதலி தன்னிடம் உண்மையாக இருக்கிறாரா அல்லது வெறும் பொழுது போக்கிற்காக தன்னிடம் பழகுகிறாரா என டெஸ்ட் செய்ய சொல்லுவர்கள்.

இதையடுத்து சேவியர் முதலில் அவர்களை சமூகவலைத்தளங்களில் பின் தொடர்வார். அந்த பெண்ணின் புரோபைலை பார்த்து அவர் எப்படிப்பட்ட பெண் என்பதை அறிந்து அவரிடம் சமூகவலைத்தளங்களிலேயே சேட்டிங் செய்ய துவங்குவார். முதலில் அந்த பெண் தன்னிடம் எப்படி பேசுகிறார் என பார்ப்பார், அந்த பெண் தன்னிடம் பேச விரும்புவதை அவர் தெரிந்து கொண்டால் அவரை சந்திக்க முயற்சி செய்வார். அந்த பெண் தனியாக சந்திக்கும் போது இவருடனான உறவு பற்றி அந்த பெண்ணாக சொல்கிறாரா என பார்ப்பார், அப்படியும் அந்த பெண் சொல்லவில்லை என்றால் இவரே அந்த பெண்ணிடம் இதற்கு முன்பு யார் யாருடன் உறவில் இருந்தார் என விசாரிப்பார் அப்பொழுதும் இவரிடம் டெஸ்ட் செய்ய சொன்ன நபர் பெயரை அந்த பெண் சொல்ல வில்லை என்றால் அந்த பெண் குறிப்பிட்ட அந்த நபரை உண்மையாக விரும்பவில்லை அந்த பெண்ணின் நோக்கம் வேறாக இருக்கிறது என குறிப்பிட்ட நபருக்கு ரிப்போர்ட் செய்வார்.

கனடாவைச் சேர்ந்த எம்மா மேக்

சமூகவலைத்தளத்திலோ நேரிலோ அந்த பெண் குறிப்பிட்ட அந்த நபருடனான உறவை சொல்லிவிட்டால் அந்த பெண் எந்தஅளவிற்கு உண்மையாக இருக்கிறது எனவும் ரிப்போர்ட் செய்வார். இதற்காக அவர் கட்டணமும் வசூலிக்கிறார். ஒரு நாள் இந்த பணியை செய்ய குறைந்த பட்சம் ரூ14 ஆயிரம் வரை வசூலிக்கிறார். சிலருக்கு இதை இலவசமாகவும், சிலருக்கு குறைந்த கட்டணத்திலும் செய்து கொடுக்கிறார்.

இவர் வாங்கிய குறைந்த பணம் ரூ744, அதிகபட்சமாக ஒருவர் தன் காதலியின் உண்மையை கண்டறிய இவருக்கு ரூ55 ஆயிரம் பணம் கொடுத்தாராம். இந்த தகவலை அவரே தற்போது டிக்டாக் வீடியோவில் தெரிவித்துள்ளார். இவர் இந்த வீடியோவை வெளியிட்ட பின்பு இவருக்கு பலர் தங்கள் காதலியை டெஸ்ட் செய்ய சொல்லி கேட்டு வருகிறார்களாம்.

தற்போது இது மூலம் இவர் வாரம் ரூ1.48 லட்சம் சம்பாதிக்கிறாராம். இவர் இது வரை பல பெண்கள் ஏமாற்றுவதையும், பல பெண்கள் தங்கள் காதலில் உண்மையாக இருப்பதையும் கண்டறித்து சொல்லியுள்ளாராம். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இவரிடம் 99 காதலன்கள் தங்கள் காதலியை சோதிக்க அட்வான்ஸ் செலுத்தியுள்ளனர். 

அவர் தனது TikTok கணக்கில் முடிவுகளை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார் , இது இப்போது 400,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களையும் மொத்தம் ஏழு மில்லியன் விருப்பங்களையும் பெற்றுள்ளது. இவருடைய பதிவிற்கு பிறகு அதிகமான இளைஞர்கள்..ஹ்ம்ம்… நமக்கு இப்படி எல்லாம் கொடுப்பினை இல்லையே என ஏக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதே போல் கனடாவைச் சேர்ந்த 18 வயதான எம்மா மேக்கிடம் பெண்கள் ஒவ்வொரு நாளும் அவளுக்கு மெசேஜ் செய்து, அவளைத் தங்கள் காதலனுடன் ஊர்சுற்றச் செய்து அவர்கள் தமக்கு உண்மையாக இருக்கிறார்கள்  என்று பார்க்கிறார்கள் என எம்மா மேக் தெரிவித்துள்ளார், இதற்காக 

எம்மா மேக், தனது டிக்டோக் கணக்கான em_mac11 ஐப் பயன்படுத்துகிறார், ஆனால் அவர் இதற்காக வாரம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என அவர் குறிப்பிடவில்லை.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post