திருப்பூர் பெண் தாயம்மாளுக்கு பிரதமர் பாராட்டு!

இளநீர் விற்று கிடைக்கும் வருமானத்தில், பள்ளி ஒன்றுக்கு 1 லட்சம் நன்கொடை அளித்த திருப்பூரை சேர்ந்த தாயம்மாளுக்கு மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு! 

தாயம்மாள் போல உதவி செய்வதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும் என பிரதமர் மோடி பெருமிதம்.

அவர் தனது உரையில் இந்தியா கேட் அருகே உள்ள அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவு சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் நிறைய பேர் தனது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அமர் ஜவான் ஜோதி வீரமரணமடைந்த வீரர்களுக்கு சிறந்த மரியாதை என பல தியாகிகள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு நாடுகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இந்த போஸ்ட் கார்டுகள் வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். வறுமையில் வாடும் நிலையிலும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடை அளித்தார். இதை செய்ய அவருக்கு மிகப் பெரிய மனம் வேண்டும் என்று தெரிவித்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post