திமுகவின் கோட்டை சூலூர் - நிரூபித்தது


பிப்ரவரி 27

 கடந்த பிப்ரவரி 22ல் நடைபெற்ற உள்ளாட்சிக்கான தேர்தலில் சூலூர் பேரூராட்சியில் போட்டியிட்ட திமுக கூட்டணி 18 வார்டுகளில் 17வார்டுகளை வாரி சுருட்டியதோடு புதிய வரலாற்றையும் பதித்திருக்கிறது நாத்திக பூமியில் ஆத்திகமும் ஆல்போலேயே தழைத்து இழையோடுகிறது சூலூரெங்கும் 

பகுத்தறிவை ஒரு பக்கம் விதைத்தாலும் பண்பாட்டிற்கு பங்கம் விளைவிக்காமல் பொதுமக்களின் கலாச்சாரங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் கொடுக்கத் தவறியதே இல்லை இந்த சூலூர் மண் 

ஆயிரம் கட்சிகள் ஆயிரம் கிளைகள் ஆயிரம் குளறுபடிகள் நிலவினாலும் வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து தேசத்திற்கே முன்னோடியாகத் திகழ்வது தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் ஜொலிக்கும் சூலூரே

பெரியார் மட்டுமல்ல வாரியாரும் மிதித்த மண் வள்ளுவன் குறள் மட்டுமல்ல வள்ளலார் குரலும் ஓங்கி ஒலிக்கும் மண்

கடவுள் பாதி மிருகம் பாதி அல்ல கடவுள் பாதி மனிதம் பாதி என மலர்ந்து வாழும் மண் சூழ்ச்சிகள் சூலூரை சூழமுடியாது என பலமுறை நிரூபித்த மண் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகவே திமுகவின் தலைமை கொண்ட மண் இந்த வெற்றியைப்பற்றி திமுகவின் சூலூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளரும், சூலூர் பேரூராட்சித் தேர்தலின் ஒருங்கிணைப்பாளருமான மன்னவனிடம் கேட்டோம் 

இந்த வெற்றி எங்களுக்கு மிதமிதப்பைத் தரவில்லை ஒருவித பயத்தையே தந்திருக்கிறது இந்த வெற்றி ஒரு கர்வத்தைத் தரவில்லை சமதர்மத்தை நிலைநாட்டி இருக்கிறது இந்த வெற்றி பரவசத்தைத் தரவில்லை புதுவித பிரசவ வலியைத் தந்ததாகவே உணர்கிறோம் 

இந்த வெற்றி எங்களின் வெற்றியே அல்ல சூலூர் மக்களுக்கான வெற்றி வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் ஆனால் மாபெரும் வெற்றியை அல்லவா எங்கள் மக்கள் தந்துவிட்டார்கள் 

ஆதலால் இந்த வெற்றியை ஒருபக்கம் கொண்டாடினாலும் நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்மால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்ற ஆலோசனையே கடந்த ஐந்து நாட்களாக என் மனதுக்கும் சூலூர் மக்களுக்குமிடையே இனம்புரியாத பரஸ்பர நதியை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன் 

இந்த வெற்றி சூலூரின் பேர் சொல்லும்  இந்த வெற்றி எங்கள் மக்களின் வளர்ச்சியை சொல்லும் இந்த வெற்றியைக் கொண்டு தமிழகமே போற்றும் முதல்நிலை பேரூராட்சியாக செயல்படுத்துவதே எங்கள் இலட்சியம் என்றார் ஆனந்தப் பூரிப்போடு மன்னவன் 


சூலூர் செய்திக்காக 

ஆ அர்ச்சுனன்  

நிருபர் 

தமிழ் அஞ்சல்

Previous Post Next Post