சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் பழுது நீக்கம் மற்றும் புதுப்பிக்கும் ஆணையை அமைச்சர் கணேசன் பயனாளிகளுக்கு வழங்கினார்

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன்  சொந்த ஊரான கழுதூர் கிராமத்தில் தந்தை  பெரியார்  நினைவு சமத்துவபுரத்தில் 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட  வீடுகள்  பழுது  நீக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிகளை  மேற்கொள்ள பயனாளிகளிடம்  பணி  ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றதலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மங்களுர் சேர்மன் கே.என்.டி .சுகுணாசங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணையை வழங்கினார்.

 பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் இயந்திரம் மற்றும் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சாலைகள் ஆகியவைகளை பார்வையிட்டார். உடன் வட்டாட்சியர் கார்த்திக்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபானி,சண்முகசிகாமணி,திமுக மாங்குளம் வெங்கடேசன் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post