திருப்பூர் மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து புதிய பஸ் நிலையம் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  திருப்பூர் மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் , டீசல் , கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி குறைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்டம செயலாளர் எஸ் .பி . பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் நோயல் முன்னிலை வகித்து பேசினார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்ரவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்கே.டி.எஸ்.ராஜா, வெள்ளக்கோவில் சேகர், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், திருப்பூர் மாநகர் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர்கள்  சுரேந்திரன், ரவீந்திரன் மற்றும் இளைஞர் அணி, வர்த்தக அணி, மாணவர் அணி, மகளிர் அணி  செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Attachments area
               
Previous Post Next Post