சென்னை குடிசை பகுதிகள் இடிப்பு தொடர்பான விவகாரம் - உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க ஒப்புதல்.!


மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது குடிசைகள் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இடிக்கப்படும் 100 குடிசை பகுதிகள் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகளை சென்னை மாநகராட்சி இடித்து வருகிறது. இந்த பணியானது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்றுவரும் சூழலில், இது தொடர்பான விசாரணையை இன்றைக்கே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் ஆன அமர்வு முன்பு ஆஜராகி முறையிட்டார். அப்பொழுது நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை நாளை விசாரிக்கலாம் என தெரிவித்த நிலையில், இடிக்கும் பணியானது நிறுத்திவைக்க முடியாது என்று கூறினர்.

ஏனெனில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தான், அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இடிக்கும் பணியின் உத்தரவில் ஏதேனும் மாற்றமோ, புதிய நடவடிக்கைகள் மேற்கொண்டாலோ அதனை நாளை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட மூத்த வழக்கறிஞர் மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருவதையும் குறிப்பிட்டார். இருப்பினும் இந்த வழக்கு விசாரணையை நாளை எடுத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.    

Ahamed

Senior Journalist

Previous Post Next Post