அக்னி பாத் ராணுவ வீரர்கள் சேர்ப்பு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - பீகார் ,ராஜஸ்தானில் வெடித்தது கலவரம்.!

 

"அக்னிபாத்" என்பது மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் ஒரு புதிய திட்டம் ஆகும், இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக ராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்க்கையில் இனிமேல் ஒப்பந்த அடிப்படையிலேயே ராணுவ வீரர்கள் சேர்க்கப்படுவார்கள்.

அப்படி ஒப்பந்த அடிப் படையில் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களுக்கு மற்றும் ராணுவ வீரர்களைப் போல அனைத்து சலுகைகளும் வழங்கப்படும், ஆனால் அவர்களுக்கு  ஓய்வு ஊதியம் வழங்கப்பட மாட்டாது.

இப்படி ஒப்பந்த அடிப்படையில் இராணுவ வீரர்களை பணியில் சேர்க்கும் பொறுப்பு பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அக்னிபாத் திட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் , இந்த நிலையில் வடமாநிலங்களில் இந்த திட்டத்திற்கு பயிற்சி ராணுவ வீரர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சி ராணுவ வீரர்கள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்கள் அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கியது உடன் ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post