நஞ்சராயன் சரணாலயத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்த வேண்டும்... திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் முதல்வருக்கு கடிதம்

 திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது:

திருப்பூரை அடுத்த சர்க்கார் பெரியபாளை யம் அருகே சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்திற்கு ஆண்டுதோறும் பல்லா யிரக்கணக்கான பறவை கள் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்கின்றன. குறிப் பாக ஐரோப்பிய நாடுக ளிலிருந்து 116 வகையான பறவை இனங்கள் இனப் பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன.

இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்திற்கு ஒரு சுற்றுலாத்தளமாக இதனை அமைக்க வேண் டும் என்பதாலும், தன்னார் வலர்கள், வன உயிரின காப்பாளர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் என பலரின் கோரிக்கைகளை யும், சட்டப்பேரவையில் எனது கோரிக்கையையும் ஏற்று, நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலய மாக அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஏப்ரல் 25ம் தேதி தாங்கள் சட்டப்பேரவையில் அறி வித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி யும், தொகுதி மக்கள் சார் பாக எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரணாலயத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கும் தரு வாயில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரி வித்துக் கொள்வதோடு, அமைய உள்ள சரணாலயத்தைச் சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளை கண்டறிந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. பருவம ழையின்போது நீரை தேக்கி வைப்பதற்கும், குளத்தின் கரையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைக்கவும், கூடுதல் நிலங்கள் தேவைப்படுகிறது.

எனவே, சரணால யத்தைச் சுற்றியுள்ள, தனி யாருக்கு நிபந்தனையுடன் அளிக்கப்பட்ட நிலங்களையும், அரசு புறம்போக்கு நிலங்கள் இருப்பின் அத னையும் கண்டறிந்து கையகப்படுத்தி சர்வதேச அளவில் சுற்றுலா பயணி களை ஈர்க்கும் வகையில் நஞ்சராயன் சரணாலயம் அமைத்திட ஏதுவாக இவ் வாறான நிலங்களை கையகப்படுத்த துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந் துரைத்து உதவிடுமாறு தெரி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறியுள்

Previous Post Next Post