குறுமைய த்ரோபால் போட்டி... கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளி வெற்றி

இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி நடத்துகிறது.

மாணவியர்கள் 14, 17 & 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான எறிபந்து போட்டிகள் (த்ரோபால்) செரீப் காலனி, கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.  கிட்ஸ் கிளப் பள்ளி குழுமங்களின் இயக்குநர் ரமேஷ்,  பள்ளி செயலாளர் நிவேதிகாஸ்ரீராம்,  ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றன. கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளி அணி 2 : 0 என்ற செட் கணக்கில் (15 : 13 / 15 : 12) கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.

17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 11 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணி 2 : 0 என்ற செட் கணக்கில் (15 : 07 / 15 : 06) வித்ய விகாஸ் பள்ளி அணியை வென்றது.

19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 12 அணிகள் பங்கேற்றன. லிட்டில் பிளவர் பள்ளி அணி 2 : 0 என்ற செட் கணக்கில் (15 : 03 / 15 : 06)  வேலவன் பள்ளி அணியை வென்றது.

குறுமைய இணைச்செயலர்கள் செந்தில்குமார், கண்காணிப்புக்குழு உறுப்பினர் முருகன் கண்காணிப்பில் , நடுவர்களாக ராமகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, சண்முகநதி, மணிமன்னன், சிவலிங்கம், மது, ராம்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

Previous Post Next Post