திருப்பூரில் பட்டாசு வெடித்த 159 பேர் மீது வழக்கு

 திருப்பூர்  மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 159 பேர் மீது மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி அன்று அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாட்டை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே  பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும்,  நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

 இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்த உச்சநீதிமன்றம் , அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

இதனிடையே பின்னலாடை தொழில்நகரமான திருப்பூர் மாவட்டத்தில்  தீபாவளி பண்டிகையை நேற்று பொதுமக்கள் உற்சாகத்தோடு கொண்டாடினர். இதனிடையே  தடையை மீறியும், நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் திருப்பூர் மாவட்டத்தில் பட்டாசுகளை வெடித்த 159 பேர் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது

Previous Post Next Post