திருப்பூரில் பகுதி அளவு சூரிய கிரகணம்!

உலகின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை  ப‌குதி அளவு சூரிய கிர‌க‌ண‌ம் நிகழந்துள்ள‌து. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு ப‌குதி சூரிய கிர‌க‌ண‌ம் நிகழ்ந்திருப்பது ஒரு அரிய நிகழ்வாகும். மேலும், இது இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும்.

சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணத்தின் போது நிலவு (சந்திரன்) சூரியனை மறைக்கிறது. இது 2 வகைகளாகப் பிரிக்கலாம். முழு நிழல் சூரிய கிரகணம், பகுதி அளவு சூரிய கிரகணம் ஆகும். முழு நிழல் சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணத்தின் போது சந்திரன், சூரியனை 40 முதல் 80 சதவீதம் வரை மறைக்கிறது.

அந்தவகையில் செவ்வாய்கிழமை ப‌குதி அளவு சூரிய கிர‌க‌ண‌ம் இந்தியாவில் நிகழ்ந்தது. இந்தியாவில் 40% வரை மட்டுமே காண முடியும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் 8% வரை மட்டுமே கிரகணம் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.  திருப்பூரில் மாலை 5.16க்கு தொடங்கி 5.48 மணி வரை 30 நிமிடங்கள் பகுதி அளவு சூரிய கிரகணத்தை காண முடிந்தது. பொதுமக்கள் பலர் தங்களிடமிருந்த கண் கண்ணாடி மற்றும் எக்ஸ்ரே பிலிம்கள் வழியாகவும் கண்டு ரசித்தனர். 

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பூரில் பெரும்பாலான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. உச்சிக்கால பூஜைகள் முடிந்தவுடன் கோவில் நடை சாத்தப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

-ராமகிருஷ்ணன்

Previous Post Next Post