வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

 வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த உமாமகேஷ்வரி (45) தனியார் டைப்பிங் இன்ஸ்டிட்யூட் பயிற்சியாளராக உள்ளார்,இவரது மகள் கிருத்திகா(20) தொலை தூர கல்வியில் லயோலோ கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இரவு கோவிலுக்கு செல்வதற்காக மகள் கிருத்திகா இருசக்கர வாகனத்தை ஓட்டியும், உமாமகேஸ்வரி பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். 

அப்போது தாம்பரம் மார்க்கமாக வண்டலூர் மேம்பால இறக்கத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத இனோவா கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது 

இதில் தூக்கி வீசப்பட்ட தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Previous Post Next Post