திருப்பூரில் வைகுண்ட ஏகாதசிக்கு தயாராகும் ஒரு 1.20 லட்சம் லட்டுகள்... தயாரிப்பு பணிகளில் 520 பேர் சுறுசுறுப்பு

 வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களுக்கு வழங்குவதற்காக திருப்பூரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணியில் 520 பேர் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜனவரி 2 ஆம் தேதி வரவுள்ள வைகுண்ட ஏகாதசி நாளில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்காக பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 


அந்த வகையில் திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணியளவில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக திருப்பூர் ஶ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் 5 அடுப்புகள் மூலம் 1 டன் கடலை மாவு, 2 டன் சர்க்கரை 1000 லிட்டர் ரீபைண்ட் ஆயில், 105 லிட்டர் நெய் மற்றும் முந்திரி, திராட்சை உள்ளிட்ட மூலப் பொருட்கள் கொண்டு லட்டு தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் 20 சமையல் கலைஞர்கள், 500 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை மாலைக்குள் 1 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகளும் தயாரிக்கப்பட்டு வழங்கிட வேண்டும் என்பதால் கல்யாண மண்டபத்தில் 200 ககும் மேற்பட்ட டேபில்களில் லட்டுகள் உருண்டை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள அனைவரும் மாஸ்க், தலை உறை அணிந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

Previous Post Next Post