பிடரியில் ஏறி மிதிக்கும் மதுபான கூட ஊழியர்... டாஸ்மாக் மதுபானக்கூட வைரல் வீடியோ

 திருப்பூரில் மதுபான கூடத்தில் வாலிபர் ஒருவரை கடை ஊழியர்கள் சரமாரியாக தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

திருப்பூர் புஷ்பா ரவுண்டான கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இளைஞர் ஒருவரை மதுபான கூட ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


முதலில் கைகளால் தாக்கிய மதுபான கூட ஊழியர்கள் பிறகு கையில் ஒரு லத்தியை கொண்டு தாக்குவதும் கழுத்தை நெரிப்பதும் பின்னர் தர தரவென  இழுத்துச் செல்லும் வீடியோ அங்கு மது அருந்த சென்ற ஒருவரின் மொபைல் மூலம் எடுக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post