கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகு அறிக்கை

கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகு அறிக்கை

கோவையில் லெட்டர்பேட் நுகர்வோர் அமைப்புகள்
மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?
கோவை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பட்டியல் பராமரிக்கப்படுகிறது இந்த பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 20 தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன பொதுமக்களின் குறைகள் ஆலோசனைகள் புகார்கள் ஆகியவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாணும் வகையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு கடந்த 2004 ஆண்டு அரசாணை 70 வெளியிட்டது அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் மீது தீர்வு காணும் வகையில் நடத்தப்படுகிறது அதுபோல அனைத்து துறை சார்பிலும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது இதில் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு வருகின்றனர் மேலும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கவுன்சில் போரம் மன்றம் என்ற பெயர்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் கோவையிலுள்ள சில நுகர்வோர் அமைப்புகள் மாவட்ட பட்டியலில் உள்ள முகவரியில் இல்லாமல் வெறும் லெட்டர்பேடுகளை வைத்துக் கொண்டு அரசுதுறை கூட்டங்களில் கலந்துகொண்டு கோரிக்கை ஏதும் வைக்காமல் அதிகாரிகளுடன் செல்பி எடுப்பது மற்றவர்களில் பேச்சுகளை குறிப்பெடுப்பது பின்னர் செல்பி எடுத்து தனக்கு நெருக்கம் உள்ளதாக குரூப்புகளில் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் சில அமைப்புகள் அலுவலகமே இல்லாமல் போலி முகவரி மூலம் பதிவு செய்துள்ளனர் குறிப்பாக பீளமேடு புதூரிலுள்ள கவி பெயரை கொண்ட ஒரு நிர்வாகி பல நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்புகளில் உள்ளதாக கூறி பல அரசு துறைகளில் கமிட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளானர் அதுபோல தடை செய்யப்பட்ட கவுன்சில் மன்றம் பெயர்களை வைத்துகொண்டு அரசு துறை கூட்டத்தில் கலந்துகொண்டு கையொப்பமிட்டு வருகின்றனர் சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் சேர்ந்துகொண்டு செயல்படுவது உள்ளிட்ட புகார்கள் அதிகரித்து வருகிறது ஆனால் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதோ பொது நல வழக்குகளோ தாக்கல் செய்யாமல் பல நுகர்வோர் அமைப்புகள் லெட்டர் பேடு பயன்படுத்தி அரசு துறை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது இவ்வாறு போலி முகவரி மற்றும் அலுவலகம் இல்லாமல் நுகர்வோர் அமைப்பு நிர்வாகி என கூறிக்கொண்டு பல அமைப்புகள் செயல்பட்டு வருவதால் இருபது ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நுகர்வோர் அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது ஆகவே அரசாணை 70 மற்றும் நுகர்வோர் அமைப்புகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மீறி கோவை மாவட்ட வழங்கல் அலுவலக பட்டியலில் இடம்பெற்றுள்ள நுகர்வோர் அமைப்புகள் அதன் முகவரியில் செயல்பட்டு வருகிறதா பொதுமக்கள் குறை தீர்க்க இவ்வமைப்புகள் செய்த பணிகள் ஒரே நிர்வாகி பல அமைப்புகள் பெயரை பயன்படுத்துவது குறித்தும் கவுன்சில் போரம் மன்றம் ஆகிய பெயர்களை கொண்ட நுகர்வோர் அமைப்புகள் தொடர்பாக முழு ஆய்வு மேற்கொண்டு போலி நுகர்வோர் அமைப்புகளை மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் இது தொடர்பாக விரைவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலர் நா.லோகு சென்னையிலுள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்
Previous Post Next Post