தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நம்பியூர் வட்டக் கிளை, 3வது வட்ட பேரவை கூட்டம்.

 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,ஈரோடு மாவட்ட நம்பியூர் வட்ட கிளை சார்பில் 3ஆவது  வட்ட பேரவை கூட்டம் வட்டக்கிளை தலைவர் எம்.மகாலிங்கம்தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்,சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் எம்ஆர் பி செவிலியர்கள்.ஊர் நூலகர்கள், உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும்,சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்றும்அரசுத் துறையில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும்,பறிக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் சிபிஎப் வட்டி குறைப்பு ஆகிய அரசாணைகளை உடனே திரும்பிப் பெற வேண்டும் என்றும்,நம்பியூர் வட்டத்தில் தலைமை மருத்துவமனை கொண்டு வர வேண்டும்,கருவூலத்துறை வட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில்வட்டத் துணைத் தலைவர் ராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்,அதனைத் தொடர்ந்து மாவட்ட இணைச்செயலாளர் பழனிச்சாமிதுவக்க உரையும்,வட்ட செயலாளர் கருப்புசாமி வேலை அறிக்கை வாசித்தார்,பொருளாளர் சண்முகம் வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார்.நம்பியூர் கோட்டத் தலைவர் குருசாமி,அங்கன்வாடி பணியாளர் மற்றும் மாவட்டத் தலைவர் ராதாமணி,தமிழக வருவாய் துறை அலுவலர் சங்க ரகு,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோபி வட்ட செயலாளர் பழனிவேலு,தமிழ்நாடு சாலை பணியாளர் மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேல்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்விஜய் மனோகரன்,மாவட்டத் தலைவர் ராக்கிமுத்து,மாவட்ட இணைச்செயலாளர் பெருமாள்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இளங்கோ,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மாவட்ட செயலாளர் அருள்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். முடிவில் நம்பியூர் பேரூராட்சி ரஹமத்துல்லாநன்றியுரை கூறினார்.

செய்தியாளர். எம்.மாரிச்சாமி

9080602161

Previous Post Next Post