ஒரே குடும்பத்தில் 4 பேரை வெட்டிக்கொன்ற குடிகார கொடூரன்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டி  கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்களது வீட்டின் அருகே சில நபர்கள் ஞாயிறு இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த மது போதை ஆசாமி அரிவாளால் தாறுமாறாக அங்கிருந்தவர்களை வெட்டினான்.

இதை தடுக்க சென்றவர்கள் ஆண்கள், பெண்கள் என்று பாராமல் எல்லோரையும் அந்த குடிகார கொடூரன் வெட்டி சாய்த்தான். இதில் செந்தில் குமார், மோகன், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 உடனடியாக தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், செந்தில்குமார் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மற்ற மூவரின் உடல்களை எடுக்க விடாமல் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளியை கைது செய்த பிறகு தான் மற்ற மூவரின் உடல்களையும் எடுக்க விடுவோம் எனக் கூறி உறவினர்களும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு மண்டல ஐ ஜி பேச்சு வார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது. 

இதில் மோகன்ராஜ் பாஜக கிளை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post