சத்தியமங்கலத்தில், அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்.முன்னாள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்பங்கேற்பு.


ஈரோடு மாவட்டம். சத்திய மங்கலத்தில் அதி முக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், அதி முக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட் டையன் எம்.எல்.ஏ. தலைமையில், பவானி சாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ. பண்ணாரி எம் .எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை யுரையாற்றிய ,கே. ஏ செங்கோட்டையன், பூத் கமிட்டியில், ஆற்றல் மிக்கவர்கள், கட்சிக்காக தியாகம் செய்தவர் கள், வாக்காளர்களை நன்கு அறிந்தவர்கள், இளைஞர்கள். மகளிர் அணியினர் இடம்பெற வேண்டும் என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகு திகளிலும் அதிமுக தலைமையிலான,  
கூட் டணி வெற்றி பெறும் என்றும், 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலி லும் அதிமுக கூட்டணியில், இடம் பெறுவார் கள் என்றார். மேலும் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் கட்சியில் இணையலாம் என்றும், அவர்களுக்கும் கட்சியில் பொறுப்பு கள் வழங்கப்படும் என தெரிவித்தார். கூட்டத் தில்,சத்தியமங்கலம், வடக்கு ஒன்றிய செய லா ளர் மாரப்பன், தெற்கு ஒன்றிய செயலா ளர் என்.சிவராஜ். பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி.  தாளவாடி ஒன்றிய செயலாளர்கள் சதிஷா, மாதேஸ், சும்பிரமணியம், சத்தி கிழக்கு கடம் பூர் ஒன்றிய செயலாளர் என். எம்.எஸ். நாச்சி முத்து,. உள்ளாட்சி மன்ற தலைவர்கள் எஸ். எம்.சரவணன்.சும்பிரமணியன்,அதிமுக பேரூர் கழகச் செயலாளர்கள், தேவ முத்து, நடராஜன், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் வெ.பெ.தமிழ்ச்செல்வி. வாத்தியார் துரைசாமி, எஸ்.பி.வெங்கிடுசாமி. அருள் முருகன் நகர, வார்டு, பேரூர், கிளைக் கழக  செயலாளர்கள், ,ஒன்றிய குழு உறுப்பினர் கள்,பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்,அதிமுக மாவட்ட,சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமான,அதிமுக
வினர் பங்கேற்றனர்.  முன்னதாக அதிமுக சத்தி நகரச் செயலாளர் ஓ.எம். சும்பிரமணி யம வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.Previous Post Next Post