தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை

 உடையும் திராவிட புரட்டுகள் !!! 
சமஸ்கிருதம் மாணவர்களுக்கு கட்டாயம் ஆக்கப்படுகிறது !!!
மகிழ்ச்சியான செய்தி !!
அதுவும் எதனால் கட்டாயம் ஆக்கப்ப்படுகிறது என்பதில் தான் பூரண மகிழ்ச்சி !!
நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்க கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு சமஸ்கிருதம் கட்டாயம் ஆக்கப் படுகிறது !!
உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராசாக்களில் சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழி கட்டாயம் ஆக்கப்படும் என்று மாநில வக்ஃபு வாரிய தலைவர் அறிவித்து இருப்பதை பாஜக வரவேற்கிறது !!!
எப்படி தமிழ் மொழி , இந்த தமிழ்ச் சமூகத்தின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் தன்னுள் அடக்கியுள்ளதோ , அதே போல இந்த பாரத நாட்டின் தொன்மையையும் பெருமையையும் பாரம்பரியத்தையும் சமஸ்கிருத மொழி தன்னுள் அடக்கியுள்ளது என்ற புரிதலின் அடிப்படையில் தான் இந்த அறிவிப்பு வந்து இருக்க வேண்டும் !!
சமஸ்கிருதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான மொழி அல்ல !!! அது அனைவருக்கும் பொதுவான மொழியாக தான் இருந்தது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன !!
குறிப்பாக உத்திரமேரூர் கல்வெட்டில் , தமிழ் மொழியையும் சமஸ்கிருதத்தையும் கற்றுணர்ந்த சித்திரமேலி பெரியனாட்டார் ஆகிய நாங்கள் என்று பொற்றிக்கப்பட்டுல வாக்கியம் , பண்டைய காலத்தில் பிராமணர்கள் மட்டும் அல்லாது அனைத்து சமூகத்தினரும் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியை பயின்றுள்ளனர் என்பது வரலாற்று ஆதாரமாக நிலைத்து நிற்கிறது !!
சமஸ்கிருதம் என்பது ஆரிய மொழி பிராமண மொழி என்று, வரலாற்றை திரித்து/பிரித்து கூறும் அனைவரின் முகத்திலும் கறியை பூசும் வண்ணம், சமஸ்கிருதம் அனைவருக்கும் ஆன மொழி என்று அழுத்தம் திருத்தமாக பதிய வைத்த மதராஸாவிற்கு நன்றிகள் !!
சமஸ்கிருதம் அனைவருக்கும் பொதுவான மொழியாக இருந்தது என்று வரலாற்று ஆவணங்களை குறிப்பிட்ட உடனே, இன்னார் மட்டும் தான் செய்ய வேண்டும் இன்னார் பயிலக் கூடாது என்று சோதனை தர்மம் கூறுவதாக ஒரு கூட்டம் கதை கட்டும் இனி ஒவ்வொன்றாக அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார் 
Previous Post Next Post