"தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை""!

"தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை"!!   96 சதவீத ஹிந்துக்கள் படிக்க அருட்தந்தையர் தான் காரணம் ! 
அப்படியாயின்
அவர்கள் படிக்காமல் போனதற்கு யார் காரணம் ?
திமுக எப்போதும் மற்றவர்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதை நாம் பார்த்து வருகிறோம் !!
முதலில் மத்திய அரசின் திட்டங்கள் மீது தங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார்கள் !
காமராஜர் போன்ற தேசியவாத சிந்தனை கொண்ட தலைவர், கல்வி புரட்சி செய்ததையும் திராவிட இயக்கங்கள் செய்ததுபோல ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார்கள் !
இப்போது அந்த கல்வி கற்றதே அருட் தந்தையரின் தயவால் என்று மடை மாற்றுகிறார்கள் !
சபாநாயகர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு , தமிழக வரலாற்றை இந்த அளவுக்கு மாற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது !
சனாதன தர்மம் உச்சத்தில் இருந்த சேர சோழ பாண்டிய காலத்தில் , ஆண் பெண் பேதமின்றி , குல வேறுபாடுகள் இன்றி, அனைவருக்கும் கல்வி கிடைத்ததை குறிக்கும் வகையில் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில், பரஞ்சோதியார் பற்றிய வரிகள் இருப்பது அப்பாவு அவர்களுக்கு எப்படி தெரியும் ?
அப்படி பார்த்தால் , கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் அந்த 96% ஹிந்துக்கள் கல்வி கற்க முடியாமல் போனது என்று நாம் சொன்னால் அப்பாவு அவர்கள் ஏற்றுக் கொள்வாரா ?
1973 ஆம் ஆண்டு தனியார் பள்ளிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு அருட் தந்தையரின் அழுத்தம் காரணமாக இருந்திருக்குமோ என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை !
ஏற்கனவே கிறிஸ்தவர்களின் தயவால் தான் திமுக ஆட்சியில் உள்ளது என்று கூறி அருட் தந்தைகளை குளிர்வித்த சபாநாயகர் , மீண்டும் அவர்களை குளிர்விக்க பேசிய பேச்சாக தான் இதை பார்க்க முடிகிறது !
ஆனாலும் 96% என்று ஏன் நிறுத்தி விட்டார் என்று புரியவில்லை ! 
100% என்று கூறி இருந்தால் இன்னும் மனம் குளிர்ந்து இருக்கலாம் !
சபாநாயகரின் இம்மாதிரி பொய்யுரை தவிர்த்து நற்பணி சிறக்க வாழ்த்துகள் ! இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார் 
Previous Post Next Post