மகளிர் உரிமை திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது!* முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெஞ்சார்ந்த நன்றி!!*

*மகளிர் உரிமை திட்டம்  மிகவும்  பாராட்டுக்குரியது!*  *முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு   சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெஞ்சார்ந்த நன்றி!!*          தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளிலிருந்து  செயல்படுத்தப்பட உள்ள சூழலில் இத்திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசினையும், முதல்வர் மு. க. ஸ்டாலினையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு முதல்வரும் புதுப்புது திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவ்வரிசையில் இந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பெண்களுக்கு அதாவது குடும்பத் தலைவிகளுக்கு     மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அத்திட்டம் தற்பொழுது செயல்படுத்தப்பட உள்ளது என்பது  நிச்சயமாக பெண்களுக்கு பேருதவியாக இருக்கும். நேரடியாக பெண்களுக்கு அந்த நிதி சென்று சேருகின்ற பொழுது நிச்சயமாக குடும்பத்தின் ஒரு தேவையை பூர்த்தி செய்வதாகவே இது அமையும் என்பது உறுதி. வீட்டின் மாதாந்திர மின் கட்டணத்திற்கோ, பால் செலவினத்திற்கோ, மளிகை அல்லது  காய்கறி வாங்குவதற்கோ அல்லது இதர கல்வி,மருத்துவ  தேவைகளுக்கு இப்பணம் பயன்பட போவதால்  இன்றைய பற்றாக்குறை  பொருளாதார சூழலில் அவர்களின் சுமையை குறைக்கும் என்பது நிதர்சன உண்மையாகும். ஸ்டாலின் அரசை பொறுத்த வரை பல்வேறு நிதிதேவை, கடன் சுமை இருந்த பொழுதிலும் கூட மாதந்தோறும் ஆயிரம் வழங்க ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ஒதுக்கியது பெண்கள் மேல் உள்ள கஷ்டத்தை உணர்ந்து அக்கறையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்றும் கூறலாம்.தேர்தலில் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோடான கோடி நன்றியினை தமிழ்நாட்டின் ஒரு கோடி பெண்கள் மனதார தெரிவிப்பார்கள் என்பது உறுதி. நல்ல திட்டங்களை விமர்சிப்பதை தவிர்த்து அதனைப் பாராட்டி, மேலும் நன்மைகள் மக்களுக்கு கிடைக்க அனைவரும் மக்கள் நலன்கருதி ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post