புது டெல்லி செல்கிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்

*பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில்* பங்கேற்க *புது டெல்லி செல்கிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் .*


இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் திரு .நரேந்திர மோடி அவர்கள் 19/06/2019 புதன் கிழமையன்று சந்திப்பு - ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் .


இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கட்சியின் அகில இந்திய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் கலந்துக் கொள்கிறார்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக சட்டமன்ற கட்சி தலைவரும் , மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் M.L.A., அவர்கள் தெரிவித்துள்ளார்.


முன்னதாக , புதுடெல்லி வருகை தரும் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கு கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களான பி.கே.குஞ்ஞாலி குட்டி M.P., இ.டி.முஹம்மது பஷீர் M.P., கே. நவாஸ் கனி M.P. , பி.வி.ஏ.அப்துல் வகாப் M.P., ஆகியோர் சிறப்பான வரவேற்பளிக்கின்றனர்.