ஆம்பூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு 3 மாதமே ஆன கழிவுநீர் கால்வாய் இடிந்து விழுந்தது

வேலூர் மாவட்டம் மின்னூர்  பள்ளிவாசல் அருகே கடந்த 3 மாதத்திற்கு முன்பாக சுமார் 17 லட்சம் மதிப்பிலான கழிவுநீர் கால்வாய் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக அப் பகுதியை தேர்வு செய்து கட்டினர். கட்டும்பொழுது அப்பகுதி மக்கள் தரமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும், தரமில்லாத பொருட்களை வைத்து கட்டினால் வரும் காலங்களில் மழையினால் தேசதம் ஏற்படும் என்று முன்கூட்டியே பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். அதையும் மீறி ஒப்பந்ததாரர்கள் ஜல்லி மற்றும் ஜல்லி தூள்களை கொண்டு கட்டியதால் தற்போது வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் கழிவுநீர் கால்வாய் முற்றிலும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்போது அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளனர்.