பெண்ணியம் பேசும் நேர்கொண்ட பார்வை

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=2RRiLC8SDgE&feature=youtu.be


நம்ம தல அஜித் நடிப்பில் புதுசா வந்திருக்கிற படம் தான் நேர்கொண்ட பார்வை இந்த படம் எப்படி இருக்கு இந்த படம் சொல்லக்கூடிய கருத்து என்ன அப்படிங்கறது பத்தி நாம இப்ப பார்க்கலாம்
 


 ஹிந்தியில்  அமிதாப் பச்சன், டாப்ஸி  நடிப்பில்  வெளியான படம் பிங்க். இந்த படத்தை தமிழ்ல எடுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு எடுக்கப்பட்ட படம்தான் நேர்கொண்ட பார்வை. தல அஜித் நடிச்சிருக்கிற இந்த படத்துல முக்கியமான கேரக்டரில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிக்பாஸ் புகழ் அபிராமி அப்புறம் சிறப்பு கேரக்டரில் வித்யா பாலன் ஸ்பெஷலா சொல்லனும்னா பாண்டேவும் இதுல நடிச்சிருக்காரு. இந்த படத்த வினோத் இயக்கியிருக்கிறார். நேர்கொண்ட பார்வை இந்த படம் ஒரு ஆழமான கருத்தை வலியுறுத்துது. அதாவது ஒரு பொண்ணு சிரித்துப் பேசினாலும் அல்லது தண்ணி அடிச்சா லோ அந்த பொண்ணு கெட்டவ கிடையாது அந்த பொண்ணு வேண்டாம் அப்படின்னா அதுக்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம் இதுல மாற்று அர்த்தம் இல்லை பெண்கள் தற்காப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களை ஆணாதிக்கம் மிகுந்த சமூகம் எந்தெந்த மாதிரியான வகையில் நசுக்குகிறது. அப்படிங்கிறத அழுத்தம் திருத்தமா சொல்லணும்னு எடுக்கப்பட்ட படம்தான் பிங்க் தமிழில்  நேர்கொண்ட பார்வை னு   டைரக்டர் வினோத் எடுத்து இருக்கார்.எந்த அளவுக்கு சரியா செஞ்சிருக்காரு அப்படின்னு சொல்லி பார்க்கணும்.
 ஆரம்பத்துல சில ஆண்கள் அடிபட்ட தங்களுடைய நண்பர்களை கார்ல ஏற்றதும் அதே நேரத்தில் மூன்று பெண்கள் ஒரு பதட்டத்தோட மற்றொரு காரில் பயணிக்க  படபடப்போடு படம் துவங்கியது இதுக்கு அப்புறம் மா அங்க என்ன நடந்தது இவர்களுக்கு என்ன ஆச்சு அப்படிங்கறத ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்குறாங்க . ஒரு கட்டத்தில பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரை ஏற்காமல் ஆண்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை அடிப்படையா வச்சி ஸ்ரதா ஶ்ரீநாத் ஐ போலிஸ் கைது பன்றாங்க சாதாரண ஒர்க்கிங் உமன்ஸ் ஆன அவங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் நம்ம தல அஜித் அவங்களுக்கு உதவி பன்ன முன்வறார். ஆனா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் இந்த பெண்களுக்கு எப்படி உதவுறார். இறுதியாக  யார் ஜெயிச்சாங்க என்பதை நேருக்கு நேரா சொல்லும் கதையை டைரக்டர் எச். வினோத். இதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கார். ஆனா தல அஜித்க்கு மாஸ் சீன் வைக்க முயன்றதுல இந்த படத்தின் கதை லேசாக தனது மையக்கருத்தில் இருந்து விலகி இருக்குனு தான் சொல்லனும். ஏன்னா ஹிந்தில அமிதாப் பன்ன அந்த ரோலில் அவரது நடிப்பு உணர்ச்சி பூர்வமா இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மேல அது ஒரு பரிதாபத்தை வரவழைக்கறதோட அவங்களுக்கு என்னாகுமோனு ஒரு சுவாரசியத்திலேயே பாக்குரவங்கல வெச்சிருக்கும். ஆனா அந்த பீலிங் இந்த படத்துல மிஸ்ஸிங். 
படத்துல ஆரம்ப காட்சி முதலே மூன்று பெண்களும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது பார்வையாளர்களுக்கு ஒரு பரிதாபம் ஏற்படல இது படத்துல ஒரு பெரிய மைனஸா மாறிடுச்சுனே சொல்லலாம். தப்பு பன்ன ஆண்களை விட்டுட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை என போகும் போதும் தொடர்ந்து அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் முதல் பாதி முழுவதும் வியாபித்து இருக்கு.  இதுல தல அஜித் க்கான போர்ஸன்னு பாத்தா ரொம்ப குறைவு தான். இருந்தாலும் தல பேசுன "யோசிச்சு நடங்க யோசிச்சிட்டே நடக்காதீங்க" மாதிரி டயலாக்லாம் அப்லாஸ் அள்ளுது. 
தமிழ் ரசிகர்களை பொருத்த வரைக்கும் இடைவேளை வரும் போது தான் படம் என்ன கதைனே புரிஞ்சிருக்கும். இடைவேளைக்கு பிறகு நீதிமன்ற காட்சிகள் தான் படத்தை நகர்த்திட்டு போகுது. ஆனா நாம இதுக்கு முன்ன பார்த்த பல நீதிமன்ற காட்சிகளை இந்த படம் நிச்சயம் தூக்கிசாப்டும்னு நெனச்சா அங்க தான் படம் தடுமாறுது. ஏன்னா நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் மேல பரிதாபம் வராத சூழ்நிலையில்  மனசு ஒன்றி போகலனு தான் சொல்லனும் . படத்துல ரங்கராஜ் பாண்டே வோட நடிப்பு பலரோட பாராட்டை பெற்றிருக்கு செய்தி விவாதங்களில் மட்டுமில்ல நடிப்பிலும் தான் ஒரு முத்திரைய பதிச்சே தீருவேன்னு அசத்தியிருக்காரு. அவரோட உடல் மொழிகளும் அபாரமா இருக்கு. நிச்சயமா சினிமாவிலயும் பெரிய ரவுண்டு வருவாரு. படத்துல தல அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி  சண்டைகாட்சி சேசிங் காட்சிகள் சேர்க்கப்பட்டாலும் அது கதைக்கு தேவையற்றதா தான் இருக்கு. தல அஜித் தோட ப்ளாஸ் பேக் காட்சிகளில் மட்டுமே வித்யாபாலன் வற்றாங்க ஆன அந்த ஒட்டுமொத்த ப்ளாஷ்பேக்குமே போரடிக்க ஆரம்பிக்குது.  நீதிமன்ற காட்சிகளிலும் ரூல் ஒன் டூ திரி னு சொல்ற இடங்கள் இறுதி காட்சியில் நோ னா நோ தான் என சொல்லும் வசனங்களில் உயிர்ப்பு கம்மியா இருக்கறதால மனதோடு ஒட்டல. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை சிறப்பு.  மொத்தத்துல நல்ல கருவை வைத்து ஹிந்தியில் பெரிய அளவில் ஹிட் அடித்த படத்தை தமிழில் அப்படியே எடுத்தும் ஏனோ ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. தல ரசிகர்கள் எத்தனை வாட்டி வேனாலும் பாப்பாங்க.பொது ரசிகர்கள் கதையின் கருத்துக்காக ஒரு முறை பார்க்கலாம். ஏ சென்டர் ஹிட். பி.சி டவுட் .


Previous Post Next Post