நியாயவிலை அங்காடிகளின் கணக்குகள் கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும்: கலெக்டர்.சி.கதிரவன்

கிராமப்புற நியாயவிலை அங்காடிகளின் கணக்குகள் 15.8. 2019 அன்று நடைபெறும் கிராம சபை முன்பு சமூகத் தணிக்கைக்காக வைக்கப்படும்,என ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நியாயவிலை அங்காடிகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக அமையும் வண்ணமாக கிராமப்புறங்களில் செயல்படும் நியாயவிலை அங்காடிகளின் முன்னுரிமை குடும்ப அட்டைகள், பயனாளிகளின் பட்டியல், மண்ணெண்ணெய் விநியோக ரசீது, மற்றும் ரசீது புத்தகங்கள் ஆகியவை 15.8. 2019 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் ,கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும்.என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.