இறுதி சடங்கு செய்ய போதுமான வசதி இல்லாமல் குப்பை தொட்டியில் உடலை வீசி சென்ற மகன்

வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=D3MfcrxifGM&feature=youtu.be


இறுதி சடங்கு செய்ய போதுமான வசதி  இல்லாமல் குப்பை தொட்டியில் உடலை வீசி சென்ற மகன். தூத்துக்குடியில் உடல் நலம் சரியில்லாமல் இறந்த தாயின் உடலை இறுதி சடங்கு செய்ய போதுமான வசதி  இல்லாமல் குப்பை தொட்டியில் உடலை வீசி சென்ற மகன். தூத்துக்குடி தனசேகரன் நகர பகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரது மனைவி வசந்தி(58) இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் இந்நிலையில் அவரது உடல் நிலை நேற்று இரவு மிகவும் மோசமான நிலையில்  இறந்தாகவும்  அவரை முறையாக இறுதி சடங்குகள் செய்ய  வசதி இல்லாமல் அவரது ஒரே  மகன் முத்துலெட்சுமணன்(29)  அவரது தாய் வசந்தியை குப்பை தொட்டில் போட்டுவிட்டு சென்றுள்ளார் இன்று காலை மாநகராட்சி குப்பை அல்லும் ஊழியர்கள் உடலை கண்டறிந்து சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் இதனை தொடர்ந்து விசாரணை செய்ததில் அவரது மகன் இவ்வாறு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் அவரது மகனை அழைத்து கண்டித்து அனுப்பினர். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.