சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மூவர்ண கொடியுடன் கூடிய டி-சர்ட்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=-bOjJWBjv60&feature=youtu.be


இந்நிலையில் 73வது சுதந்திர தினத்திற்காக திருப்பூர் பனியன் தயாரிப்பாளர்கள் மூவர்ண கொடி அச்சிடப்பட்ட டி-சர்ட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அளவுகளில் இந்த டி-சர்ட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் பனியன் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.