திருப்பூர்: நொய்யல் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

திருப்பூர், கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது இதனையடுத்து நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மேலும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார் மேலும் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆண்டிபாளையம் கல்லூரி சாலைகளை இணைக்கக்கூடிய அணைப்பாளையம் தரைப்பாலம் ஆனது நீரில் மூழ்கியது இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 12 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அதேபோல திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக 10 ஆயிரம் கன அடி நீர் வர உள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது அதே போல திருமூர்த்தி அணைக்கு அருகில் உள்ள பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post