மயிலாடுதுறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி கே.பி.எஸ்.மணி பேரவை சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி சீர்காழியில் தலைவர் கே.பி.எஸ்.மணி பேரவை சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் சட்ட மன்ற உறுப்பினருமான அமரர் கே.பி.எஸ். மணி நினைவை போற்றும் வகையில் தலைவர் கே.பி.எஸ். மணி பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக செயல்பட்டு பல சமூக சேவைகளையும் ஜாதி, மதம், பேதமின்றி மக்கள் நலனுக்கான போராட்டங்களையும் செய்து வருகிறார் அவரது மகன் முன்னாள் சீர்காழி நகராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் கே.பி.எஸ்.எம்.கணிவண்ணன். சீர்காழியில் மயிலாடுதுறையை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைவர் கே.பி.எஸ். மணி பேரவையின் தலைவரும் முன்னாள் சீர்காழி நகராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் கே.பி.எஸ்.எம்.கணிவண்ணன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீர்காழி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிள்ளிவளவன் வரவேற்புரையாற்றினார். தலைவர்கே.பி.எஸ்.மணி பேரவை நிர்வாகிகள் வீரபாண்டியன், அன்புராஜ், ஹரிகிருஷ்ணன், அமிர்தலிங்கம், ஆசைதம்பி, முத்துகுமார், தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் ராஜராஜன், ஓய்வு பெற்ற அதிகாரி ஜெக வீரபாண்டியன், பொது தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அப்பர் சுந்தரம், மாற்றுத் திறனாளி தாஹா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸ்சிஸ்ட் லெனிஸ்ட் பொறுப்பாளர் குணசேகரன்; மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவர் சரவணன், மாவட்ட  காங்கிரஸ் இணை பொது செயலாளர் ராமு, ரத்த தான கொடையாளர் நம்நாடு துணிக்கடை உரிமையாளர் அப்பாஸ் அலி, நலம் சுதாகர், ராஜ்குமார், முசாகுதீன், ஜமீன், வழக்கறிஞர் கார்த்திக், வி.சி.க செய்தி தொடர்பாளர் தேவா, விஜயபாலன், ராமலிங்கம், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட துணை செயலாளர் சந்திரமோகன், வி.சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.