சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி


 

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில் :-

 

சந்திராயன்-2 பொருத்தவரையில் விக்ரம் லேண்டர்  இருக்கும் இடம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது ஆனால் தொலைத்தொடர்பு இல்லாமல் இருக்கிறது.  அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் இஸ்ரோவின் தலைவர் மற்றும் அந்த குழுவினருக்கும் இது தோல்வில்லை இது தொடர் முயற்சி. பா.சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டதுலிருந்து பல்வேறு கட்டங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்,  கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கர்நாடக மாநிலத்தை பொருத்தவரையில் டி.கே சிவகுமார் மந்திரியாக இருந்ததால் பெரிய அளவில் நடந்த அதே போல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 100 நாள் மோடியின் ஆட்சி படுதோல்வி கண்டுள்ளது. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது முதல் ஐந்து ஆண்டும் தோல்விதான். சென்ற ஆட்சியிலும் ஏமாற்றம் இந்த ஆண்டும் மக்களுக்கு ஏமாற்றம்தான்.  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது,  நிதி நெருக்கடி,  பணப்புழக்கம் கிடையாது, தொழில்கள் மூடப்பட்டுள்ளது . வேலைவாய்ப்பு கிடைக்காதது மட்டுமல்லாமல் வேலையில் இருப்பவர்களும் வேலையை இழக்க நேரிடும். மோடி வெளிநாட்டில் மட்டுமே இருக்கிறார் அந்த பழக்க தோஷத்தால் தான் என்னமோ நம் மந்திரிகளும் வெளிநாட்டிற்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் அவர்கள் பிஜேபி மட்டுமல்லாமல் எந்த கட்சியிலும் அவர் சேர மாட்டார். எந்த ஒரு தலைவரர் கீழ்  இருந்து வேலை பார்க்க முடியாது இவ்வாறு தெரிவித்தார்.