பட்டதாரி இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த நமச்சி வாயம் என்பவரின் மகன் ஜனார்த்தன் (வயது 23)          நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டருகே மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.   ஜனார்த்தனின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது உறவினர் உயிருக்கு ஆபத்தான நிலையில்       ஜனார்த்தனனை குறிஞ்சிப் பாடி அரசு மருத்துவ மனைக்கு  கொண்டு  சென்றனர்.    அங்கே     அவருக்கு     முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக  கடலூரில் உள்ள  அரசு மருத்துவ மனைக்கு 108  ஆம்புலன்ல்சில்  கொண்டு  செல்லப்பட்டது.   பின்னர்   ஜனார்த்தனன்   உடலை  அரசு மருத்துவர்கள்  பரிசோதித்த  போது  அவர் உயிரிழந்துள்ளார்  என தெரியவந்தது.     அதன் பிறகு அவரின் உடல்   கடலூர் அரசு தலைமை  மருத்துவமனை பிணவறையில் வைக்கப் பட்டுள்ளது.  இந்த சம்பவம் சம்பவமாக  குறிஞ்சிப்பாடி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  மேலும் கொலை  சம்பந்தமான சந்தேகப் படும் நபர்கள்   நான்கு   பேரை   விசாரணை   செய்து   வருகின்றனர்.   இந்த  கொலையால் வெங்கடாம்   பேட்டை   கிராமத்தில்   பதட்டமான   சூழ்நிலை     காணப்படுவதால்    அங்கு குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.