வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஏரி கரைகளில் பனை விதை ஊன்றப்பட்டது


வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் கிராமத்தில் உள்ள ஏரி கரைகளில் நேற்று பனை விதை ஊன்றப்பட்டது. இந்த நிகழ்விற்கு மேலூர் கிராமத்தில் சங்கத்தின் கிளைச் செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வெலிங்டன் நீர் தேக்க பாசனம் சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தயா. பேரின்பம் கலந்துகொண்டு பனை விதை நடவு செய்து பனை மரத்தின் நன்மைகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கி பேசினார். உடன் சங்கத்தின் நிர்வாகிகள் கருப்பையா, பாலகிருஷ்ணன், செல்வராசு, காமராஜ், செல்வம் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.