வேலூர் காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்


வேலூர் காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பு ஆசிரியர் , அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ( ஜாக்டோ - ஜியோ ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது . ஆர்ப்பாட்டத்துக்கு உயர்மட்ட குழு உறுப்பினர் வாரா தலைமை தாங்கினார் . ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பாபு .  குப்புராமன் , அஜிஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார் . மாநில தலைமை குழு உறுப்பினர் செ. க .ஜனார்த்தான் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் . " ஆர்ப்பாட்டத்தில் , மத்திய - மாநில அரசுகள் தேசிய வரைவு கல்வி கொள்கையை முழுமையாக திரும்ப பெற வேண்டும் . . ! பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து , பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . தொடக்க , நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் ! அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் . ' இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் ) , அரசு ஊழியர்களின் சாதியமுரண்பாடுகளை காய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி கோஷம் எழுப்பினர் . ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைமை குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார் , செல்வகுமார் , இளங்கோ , ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டார் .