வேப்பூர் அருகில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் மின்கசிவால் ஆறு வீடுகள் தீப்பற்றி எரிந்து சாம்பலானதது


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் மூக்கன் மகன் ஆதிமூலம் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விவசாய வேலைக்காக வீட்டிலுள்ளவர்களுடன் காட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரது வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு வீடு தீப்பற்றி உள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர் அந்நேரத்தில் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. அதனால் ஆதிமூலம் வீட்டிற்கு அருகிலுள்ள சின்னதுரை, செந்தில்குமார், சங்கர், பாபு , கென்னடி ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவி முற்றிலும்  எரிந்தது. 

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இந்த தீ விபத்தால் சுமார் 4 லட்சம் ரூபாய் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது. இச்சம்பவம் அறிந்த வேப்பூர் வருவாய் ஆய்வாளர் பழனி கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் ஆகியோர் தீப்பற்றி எரிந்து வீடுகளை இழந்தவர்களுக்கு இரவு உணவு மற்றும் தங்குவதற்கும் உடனடியாக ஏற்பாடு செய்தனர்.