அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலை பற்றிய ஆலோசனைக் கூட்டம் 

அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலை பற்றிய ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியப்பம்பாளையம்  பேரூராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை  பற்றிய ஆலோசனைக் கூட்டம்  தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு  எஸ். ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.